Tuesday, March 4, 2014
Tuesday, November 17, 2009
பொம்மையம்மா பொம்மை..! - குழந்தைப் பாடல்

நான் விளையாடும் பொம்மை..!
அசைந்து அசைந்து போகும்
அழகு யானை பொம்மை..!
தத்தித் தத்தி தாவும்
குட்டி முயல் பொம்மை..!
குட்டிக் கரணம் போடும்
குட்டிக் குரங்கு பொம்மை..!
கர்... புர்னு... கத்தும்
கறுப்புக் கரடி பொம்மை..!
கடக்கு... முடக்குன்னு போகும்
கட்டை வண்டி பொம்மை..!
நன்றாய் வாலை ஆட்டும்
நாய்க்குட்டி பொம்மை..!
நல்ல நல்ல பொம்மை
நான் விளையாடும் பொம்மை..!
(எனது எல்.கே.ஜி., வகுப்பு ஆசிரியை கேட்டுக் கொண்டதற்கிணங்க, எனது தந்தை எழுதித் தந்தை பொம்மை குறித்த சிறுவர் பாடல்...)
Labels:
கல்வி,
சிறுவர் பாடல்கள்,
புனைவு
Saturday, August 16, 2008
Tuesday, August 12, 2008
பள்ளிக்கூடம் போகலாம் வா பாப்பா... - சிறுவர் பாடல்

நல்ல பாடங்களைப் படிக்கலாம் வா பாப்பா...
புது நண்பர்கள் கிடைப்பர் வா பாப்பா...
புதிய உலகத்தைக் காண வா பாப்பா..!
வீட்டில் இருந்தது போதும் பாப்பா...
விரைந்து நீ எழுந்து வா பாப்பா...
ஒழுங்காய் தினமும் பள்ளி சென்று
ஒழுக்கமதை கற்போம் வா பாப்பா...
தாய் தமிழ் கற்கலாம் வா பாப்பா...
தரணி மீதில் நடந்திட வா பாப்பா...
இலக்கணத்தை கற்போம் வா பாப்பா..
இலக்கணமாய் வாழ்வோம் வா பாப்பா..!
இலக்கியம் கற்போம் வா பாப்பா...
இயல்பாய் வாழ்வோம் வா பாப்பா
இயற்கையை அறிவோம் வா பாப்பா...
அதனுடன் இயைவோம் வா பாப்பா..
அயல் மொழி கற்போம் வா பாப்பா...
அகிலத்தை அறிவோம் வா பாப்பா..!
கணிதம் படிப்போம் வா பாப்பா..!
கணக்காய் வாழ்வோம் வா பாப்பா..!
அறிவியல் படிப்போம் வா பாப்பா...
அறிவைப் பெருக்கொவோம் வா பாப்பா..!
வரலாறு படிப்போம் வா பாப்பா..!
வாழ்ந்து காட்டுவோம் வா பாப்பா..!
புவியியல் படிப்போம் வா பாப்பா..!
பல புதிர்களை அவிழ்ப்போம் வா பாப்பா..!
வானியல் படிப்போம் வா பாப்பா..!
வானில் நடப்போம் வா பாப்பா..!
கடலியல் படிப்போம் வா பாப்பா..!
கருத்தாய் வாழ்வோம் வா பாப்பா..!
உடலியல் படிப்போம் வா பாப்பா..!
நோயின்றி வாழ்வோம் வா பாப்பா..!
கல்வி கற்க வா பாப்பா..!
கற்பூரமாய் நீ படி பாப்பா..!
பாடம் படிக்க வா பாப்பா..!
பகுத்தறிவை வளர்க்க வா பாப்பா..!
Labels:
சிறுவர் பாடல்கள்
Tuesday, June 17, 2008
கல்வி என்பது..?

அறியாமை இருளகற்றும்
அகல் விளக்கு..!
ஆச்சர்யங்களை உடைத்தெறியும்
ஆச்சர்யக்குறி..!
இயற்கையின் சிக்கலைக் கூட
இயல்பாய்க் காட்டும் இயல்..!
ஈரேழு உலகங்களையும் (பேரண்டம்)
ஈர்ப்போடு காட்டும் ஈர்ப்புச் சட்டம்..!
உண்மைகளை வெளிக்கொணரும்
உன்னத ஒளிவிளக்கு..!
ஊசலாடும் வாழ்க்கையில் ஊடாடும்
ஊட்டப்பயிர்..!
எது உண்மை... எது பொய்மையென
எடுத்துக் காட்டும் நியாயத்தராசு..!
ஏன்..? எதற்கு..? எப்படி..? என்கிற கேள்விகளுக்கு
ஏகாந்தமாய் பதில் தரும் பட்டறிவுச் சுரங்கம்..!
ஐயங்களை அடியோடகற்றி
ஐம்புலனையும் கூர் தீட்டும் பாசறை..!
ஒன்று, இரண்டு, மூன்று என்று கணிதத்தை
ஒரு பிழையுமின்றி கற்றுத்தரும் கற்பகத்தரு..!
ஓதாமல் இருப்பவரைக் கூட தன்திறமையால்
ஓதவைக்கும் மந்திரக்கோல்..!
ஔவைக்கு மட்டுமின்றி.. அனைவருக்கும் கிடைத்த
ஔடத மாத்திரை..!
ஃகறை இல்லாத அசடுகளுக்கு
ஃகறையுள்ள ஆயுதம்..!
Labels:
கல்வி
Subscribe to:
Posts (Atom)