
நான் விளையாடும் பொம்மை..!
அசைந்து அசைந்து போகும்
அழகு யானை பொம்மை..!
தத்தித் தத்தி தாவும்
குட்டி முயல் பொம்மை..!
குட்டிக் கரணம் போடும்
குட்டிக் குரங்கு பொம்மை..!
கர்... புர்னு... கத்தும்
கறுப்புக் கரடி பொம்மை..!
கடக்கு... முடக்குன்னு போகும்
கட்டை வண்டி பொம்மை..!
நன்றாய் வாலை ஆட்டும்
நாய்க்குட்டி பொம்மை..!
நல்ல நல்ல பொம்மை
நான் விளையாடும் பொம்மை..!
(எனது எல்.கே.ஜி., வகுப்பு ஆசிரியை கேட்டுக் கொண்டதற்கிணங்க, எனது தந்தை எழுதித் தந்தை பொம்மை குறித்த சிறுவர் பாடல்...)