Tuesday, June 17, 2008

கல்வி என்பது..?


அறியாமை இருளகற்றும்
அகல் விளக்கு..!

ஆச்சர்யங்களை உடைத்தெறியும்
ஆச்சர்யக்குறி..!

இயற்கையின் சிக்கலைக் கூட
இயல்பாய்க் காட்டும் இயல்..!

ஈரேழு உலகங்களையும் (பேரண்டம்)
ஈர்ப்போடு காட்டும் ஈர்ப்புச் சட்டம்..!

உண்மைகளை வெளிக்கொணரும்
உன்னத ஒளிவிளக்கு..!

ஊசலாடும் வாழ்க்கையில் ஊடாடும்
ஊட்டப்பயிர்..!

எது உண்மை... எது பொய்மையென
எடுத்துக் காட்டும் நியாயத்தராசு..!

ஏன்..? எதற்கு..? எப்படி..? என்கிற கேள்விகளுக்கு
ஏகாந்தமாய் பதில் தரும் பட்டறிவுச் சுரங்கம்..!

ஐயங்களை அடியோடகற்றி
ஐம்புலனையும் கூர் தீட்டும் பாசறை..!

ஒன்று, இரண்டு, மூன்று என்று கணிதத்தை
ஒரு பிழையுமின்றி கற்றுத்தரும் கற்பகத்தரு..!

ஓதாமல் இருப்பவரைக் கூட தன்திறமையால்
ஓதவைக்கும் மந்திரக்கோல்..!

ஔவைக்கு மட்டுமின்றி.. அனைவருக்கும் கிடைத்த
ஔடத மாத்திரை..!

ஃகறை இல்லாத அசடுகளுக்கு
ஃகறையுள்ள ஆயுதம்..!

0 comments: