
இந்தியாவின் விடுதலைக்கு
முந்தி நின்ற வீரர்களில்
முன்னே நின்ற வீரராம்
எங்கள் நேரு மாமா...
விடுதலைக்குப் பின்
நாட்டின் முதல் பிரதமாராய்
ஆட்சி செய்த பிதாமகராம்
எங்கள் நேரு மாமா...
பார் போற்றும் காந்தியடிகளாரின்
நேர் கூற்று வாக்குப்படி
ஊர் போற்ற ஆட்சி செய்தவராம்
எங்கள் நேரு மாமா...
நம் நாட்டின் செல்வங்களை
வெள்ளையர்கள் திருடிச் சென்ற
வேதனைகளை துடைத்தவராம்
எங்கள் நேரு மாமா...
வறுமையில் சிக்கியிருந்தவர்களை
பொறுப்போடு காப்பாற்ற - புதுத்
தொழில் திட்டங்களை வகுத்தவராம்
எங்கள் நேரு மாமா...
நம்மிடம் சண்டை போடும் நாடுகளை
நட்பு கொண்ட நாடுகளாய் மாற்ற
பஞ்ச சீலக் கொள்கை வகுத்தவராம்
எங்கள் நேரு மாமா...
இந்தியாவின் இரும்புப் பெண்மணி
இந்திரா காந்தியை நமக்கு
வழங்கிட்ட வள்ளலாம்
எங்கள் நேரு மாமா...
குழந்தைகளின் நெஞ்சத்திலே
என்றும் பூத்திருக்கும்
இதயத்து ரோஜா மலராம்
எங்கள் நேரு மாமா...
- மோ. கணேசன்.
(10.11.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)
(நவம்பர் 14 பண்டித ஜவஹர்லால் நேருவின் 119 -வது பிறந்தநாள்)
0 comments:
Post a Comment