
மரம் வளர்ப்போம் வாருங்கள்
மாமழை பெறுவோம் வாருங்கள்
யாகம் வளர்த்தால் மழை வரும் என்ற
மடமையைப் போக்குவோம் வாருங்கள்!
யாகம் வளர்ப்பது மூடத்தனம்
மரம் வளர்ப்பது மூலதனம்
செடி கொடி வளர்த்துப் பாருங்கள்
வெம்மை நீங்கி வாழலாம்!
மக்கள் தொகை பெருக்கத்தால்
காட்டு வளங்கள் அழிகின்றன
காட்டு வளங்கள் அழிவதால்
கானல் வெப்பம் அதிகரிக்கும்!
வெப்பம் உலகில் அதிகரித்தால்
வேண்டா விளைவுகள் ஏற்படுமே
மழை நீர் மறைந்து போகும்
மனித இனம் அழிந்து போகும்!
வனவிலங்குகள் மாண்டு போகும்
புல் பூண்டுகள் தொலைந்து போகும்
பூமிப் பந்து நெருப்பாகும்
வேண்டாம் இந்த விபரீதம்!
புவியின் வெப்பம் தணிக்கவே
பூமியெங்கும் மரம் நடுவோம்
மழை வளம் காக்கவும் மனித வளம் காக்கவும்
மரம் வளர்ப்போம் வாருங்கள்!
-மோ. கணேசன்
(30.06.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)
0 comments:
Post a Comment