Wednesday, May 28, 2008

ஆலோலங்கிளி! - குழந்தைப் பாடல்

ஆலோலங்கிளி தோப்பிலே
அழகுக்கிளி வீட்டிலே!
ஆடுது பார் பைங்கிளி
பச்சைக்கிளி மூக்கிலே சிவப்பு நிறம் ஜொலிக்குதே!

பஞ்சவர்ணக் கிளியுண்டு
பச்சை நிறக் கிளியுண்டு
வெள்ளை நிறக் கிளியுண்டு
வெண்கொண்டையுள்ள கிளியுண்டு!

படகு போல சிறகுகளாம்
நீளமான இறகுகளாம்
குட்டியூண்டு கண்களாம்
குபீரென்று பறந்தோடுமாம்!

நெல், கம்பு தானியங்களை
நேர்த்தியாக உண்ணுமாம்
வளைந்திருக்கும் வாயாலே
வாகாய் பழங்களைத் தின்னுமாம்!

பிள்ளைகளுடன் விளையாடவே
கிள்ளை மொழி பேசுமாம்
மனிதருடன் பழகுமாம்
மானுடர் போலவே பேசுமாம்!

-மோ. கணேசன்
(30.09.2006 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)

0 comments: