Wednesday, May 28, 2008

குயிலே.. குயிலே... குயிலக்கா...! - குழந்தைப் பாடல்


குயிலே.. குயிலே... குயிலக்கா..!
நீ கூவும் குரல் தேனக்கா...!
வானம்பாடி போலவே நீ தினமும்
'கானம்'பாடி சுற்றுகிறாய்..!

இவ்வளவு அழகாய் பாடுவற்கு
எங்கே நீ கற்றுக் கொண்டாய்..!
நானும் உன்போல் பாடுவதற்கு
எனக்கும் சொல்லேன் குயிலக்கா..!

உன் நிறம் தான் கறுப்பக்கா..!
உண் கண் நிறமோ சிவப்பக்கா..!
உன் உருவம் சிறிதே ஆனாலும்
உன் குரல் வளமோ அழகக்கா..!

நீ தூரத்தில் கூவும் குரல் கேட்டு
என் செல்லத் தம்பி விளம்புகிறான்..!
யாரண்ணா அங்கு பாடுவது
என் முன்னே வந்து பாடச் சொல்..!

நீங்கள் வாழ மரமில்லை..?
மரங்களை வைக்க எங்களுக்கு மனமில்லை
வனங்கள் மறைந்து போயினவே
என வேறிடம் செல்ல போகிறாயோ...!

எங்கே நீ பறந்து சென்றாலும்
எங்களை நீ மறவாதே..!
நீ வாழ நாங்கள் அரும் பெரும்
மரங்களை மீண்டும் வளர்கின்றோம்..!

வனங்கள் இல்லை என்று வாடாதே..!
மீண்டும் வனங்களை உருவாக்குகின்றோம்..!
இருப்பிடம் தேடி வேறிடம் போகாதே
உன்னை இரு கரம் கூப்பி கேட்கின்றோம்..!

-க. ஆதித்தன். 08.04.2008
(17.05.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)

0 comments: